Tamilnadu
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க அரசு, குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைவது குதிரை பேர சந்தேகத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் செய்தியாளர்களிடம் கூறிய கருத்து குதிரை பேரத்தை மெய்ப்பித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோவே ஒப்புக்கொண்டுள்ளதாக, அவர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநர் அர்லேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்
அதில், ”கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!