Tamilnadu
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க அரசு மீது சட்டம் - ஒழுங்கு குறித்து விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆனால், தற்போது விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இக்குற்றங்களைத் தடுப்பதற்காக, கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே வெறும் சீருடைகளையும், பெயர்களையும் மட்டும் மாற்றி த.வெ.க அரசு செயல்படுத்தி வருகிறது.
'சிங்கப் பெண் படை' என்ற புதிய பிரிவைத் தொடங்கி வைத்த பிறகுதான், ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இதுவரை இப்படியொரு கொடூரம் எப்போதும் நடந்ததே இல்லை.
நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வியே இப்போது எழுகிறது. பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் இப்படியான கொடூரக் குற்றங்கள் தினமும் நடக்கும். ஆனால், தற்போது தமிழ்நாட்டிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருவது பொதுமக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சட்டம் - ஒழுங்கைச் சீரமைக்காமல் முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகக் கோட்டையிலேயே உட்கார்ந்துகொண்டு, கார் ஓட்டுவது போன்ற விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார்.
இந்நிலையில், 'நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!