Tamilnadu

இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!

தமிழகத்தில் த.வெ.க அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்தில், பாலியல் கொடுமைகள், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆட்சியில் மக்கள் திட்டங்களைப் பற்றி செய்திகளில் பார்த்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் குற்றங்களைத் தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை என்று தோன்றும் அளவிற்கே முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது.

'இந்த அரசை ஏன் இப்போதே விமர்சிக்கிறீர்கள்? இப்போதுதானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்' என்ற குரல்களும் எழுகின்றன. அது சரிதான், ஆனால் தினமும் நடக்கும் குற்றங்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பத்தானே வேண்டும்? கண்முன்னே நடக்கும் குற்றங்களைக் கண்டும்காணாமல் எப்படி இருக்க முடியும்? குற்றங்களைத் தடுப்பதுதானே அரசின் கடமை? அதைத்தான் தற்போது எல்லாரும் கேட்கிறார்கள்.

ஆனால், இந்தக் கேள்விகளைக் கூட த.வெ.க அரசால் எதிர்கொள்ள முடியாமல் மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில், 'இது பற்றிப் பேசக் கூடாது' என்றால் என்ன நியாயம் இது?" என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரின் சமூகவலைதள பதிவில், "கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, புதிய தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த 6 மாதம் டைம் கேட்டா சரி... நல்லது!

ஆனால், அன்றாடம் நடக்கும் மின்வெட்டு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! த.வெ.க கட்சியினரால் பாதிக்கப்படும் பெண்களின் உணர்வுகள், பாதுகாப்பு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! பள்ளிகளுக்குள் அவர்கள் நடத்தும் அட்ராசிட்டி பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம் இது?

மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் திமுக என்றும் தொடர்ந்து பேசும்! கலைஞரின் வழியில் மக்கள் பணி செய்வோம்! கலைஞரின் வழியில் பேசுவோம்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: “த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!