Tamilnadu
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
"வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பேன், மக்களுக்குப் பாதுகாவலராக இருப்பேன்" என உறுதியளித்து தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இன்னும் ஆட்சி கூட அமைக்கவில்லை. முதலமைச்சராக விஜய் பொறுப்பேர்க்கவில்லை. பெரும்பான்மை இல்லாததால் தங்களுக்கான ஆதரவைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி ஒரு சூழல் இருக்கும் நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகளின் மூன்று சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் சம்பவம் :
சென்னை காசிமேடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் த.வெ.க. வட்டச் செயலாளர் தினேஷ். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது குறித்து இராயபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, த.வெ.க. நிர்வாகி தினேஷைக் கைது செய்துள்ளனர்.
இரண்டாவது சம்பவம் :
சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று இன்னும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கூட ஏற்கவில்லை; அதற்குள் ரவுடி போல வாளால் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் விஜய் தாமு.உடனிருந்த நிர்வாகி ஒருவர் "இப்படி நடந்து கொள்ளக்கூடாது" எனக் கூறிய நிலையிலும், அவரது பேச்சைப் பொருட்படுத்தாமல் வாளால் கேக் வெட்டிய இச் செயலைக் கண்டு, "இவருக்கா நாம் வாக்களித்தோம்?" என்று அந்தத் தொகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மூன்றாவது சம்பவம் :
விஜய் வெற்றி பெற்றதை அடுத்து, இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் காரின் வெளியே தொங்கியபடி விசில் அடித்து அங்கிருந்த பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர் த.வெ.க-வினர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட த.வெ.க-வினர் 12 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. த.வெ.க-வினரின் இந்த மூன்று சம்பவங்களும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளன.
Also Read
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!
-
“தொகுதி மறுவரையறையை நிச்சயம் எதிர்ப்போம்! அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
“எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்று சேர்த்துவிட்டால் வெற்றி பெற்று விட முடியாது!” : முரசொலி தலையங்கம்!