Tamilnadu
உழவர்களை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத் திமிர் : தி.மு.க IT WING கண்டனம்!
பச்சைப் பொய் பேசும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்பலமான ஒன்றிய பாஜகவின் விவசாய விரோத முகம் என நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் தி.மு.க IT WING கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், "நெல்லுக்கு ஊக்கத்தொகை தரக்கூடாது என ஒன்றிய அரசு சொல்லவே இல்லை என்று கூச்சமே இல்லாமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தார் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள். ஆனால், ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வக் கடிதத்தை அவர்களே வெளியிடும் வகையில் செய்து அவர்களின் பித்தலாட்டத்தை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சோறு போடும் உழவர்களை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் அதிகாரத் திமிரைப் பாருங்கள்:-
1. மாநில அரசு சொந்த நிதியில் ஊக்கத்தொகை தருவதால், விவசாயிகள் அதிகமாக நெல் விளைவிக்கிறார்களாம்!
2. நெல், கோதுமை அதிகம் விளைவிப்பதால் நிலம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் கெட்டுப் போகிறதாம்!
3. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டுமாம்!
என்ன ஒரு திமிர்பிடித்த வாதம் இது? சேற்றில் கால் வைக்கும் விவசாயிகளைச் சூழலியல் குற்றவாளிகள் போலச் சித்தரிக்கும் இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது? தாங்களும் விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை தர மாட்டீர்கள்; உழைக்கும் மக்களின் மீதுள்ள அக்கறையில் மாநில அரசுகள் கொடுக்கும் பணத்தையும் தடுத்து நிறுத்த சொல்வீர்கள்! இதுதான் விவசாயிகள் நலன் என நாடகம் போடும் பா.ஜ.கவின் உண்மையான கோர முகம்.
டெல்லியின் இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சுகிற அரசல்ல திராவிட மாடல் அரசு! ஒன்றிய அரசின் தடையை தவிடுபொடியாக்கி, உழவர்களின் நலனே உயிர் மூச்சு எனத் தொடர்ந்து ஊக்கத்தொகையை வழங்கி, விவசாயிகளின் அரணாக கெத்தாக நிற்கிறார் நமது முதலமைச்சர்!
பச்சைத் துண்டு போர்த்திக்கொண்டு நானும் ஒரு விவசாயி என ஊர் ஊராகச் சென்று நாடகமாடும் போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்குச் கொஞ்சமேனும் சூடு, சொரணை இருந்தால், விவசாயிகளை இழிவுபடுத்தும் தன் எஜமானர்களான மோடி அரசையும், நிர்மலா சீதாராமனையும் எதிர்த்துக் கேள்வி கேட்பாரா? அல்லது டெல்லிக்கு பயந்து பற்களைக் கடித்துக்கொண்டு பம்முவாரா?
பொய் முகங்களை கிழித்தெறிந்து, உழவர் விரோதக் கூட்டமான NDA-வை 2026-ல் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!