Tamilnadu
“டெல்லி இருளை வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் அரசை தொடரச் செய்வோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கழக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிறகு செஞ்சி தொகுதி வேட்பாளர் செஞ்சி மஸ்தானை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்தும், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி வி.சி.க வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரங்களில் திராவிட மாடல் அரசின் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், விடியல் பயணம், நான் முதல்வன், காலை உணவு திட்டம் போன்ற சாதனை திட்டங்களை எடுத்துக் கூறினார். பிறகு திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்படும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கினார்.
அதேபோல், ”தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிற டெல்லி அணியை, தமிழ்நாடு புறக்கணிக்க இருக்கும் தேர்தல் இது” என்று சட்டமன்ற தேர்தலின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
“காலை வாரிவிடும் பத்துத் தோல்வி பழனிசாமியை, மொத்தத் தோல்வி பழனிசாமியாக மாற்றி, இந்தத் தேர்தலில் அவரை வீட்டிற்கு அனுப்புவோம்!” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!