Tamilnadu
சொந்த கட்சி பெண்ணுக்கு.. 6 மாதமாக நடவடிக்கை எடுக்காத மேலிடம் -தவெக வேட்பாளர் மீது பாய்ந்த பாலியல் வழக்கு!
தவெக தலைவர் நடிகர் விஜய், நேற்று முன் தினம் தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் அதிமுகவில் இருந்து புதிதாக சேர்ந்தவர்கள், பாஜகவில் இருந்து சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் 5 ஸ்டார் ஹோட்டல் வாசலில் த.வெ.க-வினர் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் இந்த பட்டியலில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருக்கும் பிரகாசம் என்கிற குட்டி என்பவரை பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்தார் விஜய். இந்த நிலையில், பிரகாசம் என்கிற குட்டி மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் மகளிர் அணி நிர்வாகி சங்கீதா என்பவரிடம் பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து த.வெ.க தலைமைக்கு பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த பின்பும் கட்சி தலைமை நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 30) திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வருகை தந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார்.
பெண்ணின் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது பிரிவு 296 B, பிரிவு 74, பிரிவு 75 (2) பிரிவு 79 பிரிவு 351 (3) பிரிவு 4 ஆகிய 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
போலீசில் புகார் அளித்தால், கூலிப்படையை வைத்து குடும்பத்தை கொலை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணை தவெக வேட்பாளர் பிரகாசம் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த பெண்ணிடம் முதல் கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசமிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!