Tamilnadu
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள் இன்று (14.03.2026) செய்தியாளர்களை சந்தித்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து, இந்த வளைகுடா பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனை காரணமாக, நம்முடைய மாநிலத்துக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நம்முடன் இந்த குறிப்பிட்ட கூட்டத்தில், இன்று காலை கூட நடத்தினார். அதைத்தான் நாங்கள் சொல்லப் போகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு கூட்டம் நடப்பதற்கு முன்பாக, பிப்ரவரி 28-ஆம் தேதி இந்த பிரச்சனை ஏற்பட்டவுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளும், அதேபோல, ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக கடந்த 10.3.2026 அன்று ஒரு ஒருங்கிணைப்பு கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், இதை சீர் செய்வதற்கு நடந்தது.
அதற்குப் பிறகு, முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நம்முடைய உணவு மற்றும் உணவுப் பொருள் சப்ளை வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களின் தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து அலுவலர்கள் எல்லோரும் சேர்ந்து 11-ஆம் தேதியும், நம்முடைய ஐஓசி-யுடன் சேர்ந்து தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள், உணவகங்களின் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் கூட்டத்தை நடத்தினோம்.
அவங்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கு, இவ்விடர்பாடு தொடர்பாக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலாளர் அவர்கள் தனியாக அவரும் வந்து 9-ஆம் தேதி, 12-ஆம் தேதி, நேற்றைய தினம் கூட தொடர் கூட்டத்தை நடத்தி அதன் அடிப்படையில்தான் இன்றைக்கு இந்த கூட்டம் நடந்திருக்கிறது. உணவுப் பொருள் அமைச்சர் அவர்களிடம் பல்வேறு அமைப்புகள் சில கோரிக்கைகளை வழங்கினார்கள். அதையெல்லாம் இன்றைக்கு நாங்கள் விவாதித்தோம்.
முதலாவதாக, முதலமைச்சர் அவர்கள் சில முடிவுகள் எடுத்தார்கள். அதில், முதல் முடிவு என்னவென்றால், உணவகங்கள், டீ கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட அனைத்து வகையான உணவகங்கள், அவர்கள் உணவகங்கள் என்று பதிவு செய்திருக்க மாட்டார்கள். அதுபோன்று அவர்களுக்கு இந்த எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்புகள் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் பில் வந்தால், அதற்கு ஒரு பிளாங்கெட்டா ரூபாய் சலுகை. அதை மானியமாக அறிவித்திருக்கிறார். கூடுதல் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் மானியமாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் எவ்வளவு நாள் அமலில் இருக்கிறதோ, இந்த சலுகை தொடரும்.
ஏற்கனவே, நம்முடைய தொழிற்சங்கங்களும், உணவகங்களின் சங்கப் பிரதிநிதிகள் எல்லோரும் கேட்டிருந்தார்கள். Peak periods-ல் அதிகப்படியான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். இது ஹோட்டலுக்கு மட்டுமல்லாமல், இப்போது கிளவுட் கிச்சன் ஹோட்டல் என்று பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் எல்லோருக்கும் இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றால், அனைத்து வகையான உணவகங்கள் உணவு தயாரிக்கும் பொழுது, நாங்கள் அதையெல்லாம் பிரித்துப் பார்க்கமாட்டோம்.
அதற்கு அந்த கூடுதல் செலவு யூனிட் என்ன? இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ, எதுவரைக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதோ, அந்த கூடுதல் செலவுக்கு நேரடியாக 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில், கூடுதலாக இதை பயன்படுத்தினால் அதில் 2 ரூபாய் மானியம்.
எளிதாக போய் சேரவேண்டும். டீ கடைகள் குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் தெளிவுப்படுத்தச் சொன்னார்கள். டீ கடைகளுக்கு ஏதாவது EB சம்பந்தமான பொருளை வைத்து கூடுதல் செலவானால் அவர்களுக்கும் இந்த பயன்பாடு கிடைக்கும். அனைத்து வகையானவர்களுக்கும் இது பயன்படும் என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தச் சொன்னார்கள். உணவகங்கள் என்று வந்தாலே, கூடுதல் மின்சார செலவு கடந்த மாதத்தைவிட இந்த மாதம் அதிகமாக அவருக்கு வந்தால் அதற்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இரண்டாவது, எரிவாயு பயன்படுத்தும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடியை சமாளிக்கும் வகையில், மின் அடுப்புகள், இன்டக்ஷன் ஸ்டவ் அல்லது எலக்ட்ரிக் ஸ்டவ் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது (UIGP) அதில் 25 சதவிகிதம் அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும், இதே போல, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம், 2 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம், அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கவும், முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையினைப் பெற்று எல்பிஜி, சிஎன்ஜி, டீசல், விறகு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கி வருகிறது. இந்நிறுவனங்கள், எல்பிஜி, சிஎன்ஜி போன்ற எரிபொருட்களுக்கும் மாறாக மண்ணெண்ணெய், ஆர்டிஎஃப், HSD, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவினை பெற தேவையில்லை. TNPCB-க்கு தெரிவித்தால் மட்டும் போதும். No requirement for approval. தகவல் தெரிவித்தால் மட்டுமே போதுமானது. ஏனென்றால், ஒன்றிய அரசு அறிவித்துள்ள எல்பிஜி, சிஎன்ஜி பயன்பாட்டுக்கு கட்டுப்பாட்டு கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் 9300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மூலமாக முதலமைச்சர் அவர்களும் பார்த்திருக்கிறார்கள். திடீரென்று உணவகங்கள் எல்லாம் பால் வாங்க முடியவில்லை என்று தெரிவித்தபோது, நம்முடைய கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள், கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஆதலால், தற்போது அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவினே நேரடியாக அவர்களிடம் கொடுத்தால் அதை முழுவதுமாக பெறுவதற்கான ஆணையும் முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்திருக்கிறார்.
இதற்கு அடுத்தது, எரிவாயு (LPG) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள காரணத்தினால், அந்த விவசாயிகள் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றி 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமலும் அவர்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கி, முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள்.
மேலும், மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து, தலைமை செயலாளர் அவர்கள் கண்காணிக்க அரசு உயர் அலுவலர் கொண்ட குழுவில் இடம் பெற்ற விளக்கங்கள் பற்றி தனியாக பேசுவார்கள்.
இதுபோல, முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு காலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அளவில் இருக்கக்கூடிய விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்கள் உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், குழு கண்காணிக்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள்.
இத்துடன் இந்த மாதம் பொது விநியோக திட்டத்தின் கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார்கள். இது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் கண்காணித்து தகவல் பெற்றிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளின் உயர்மட்ட குழு, தலைமை செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மாநில அரசு எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பேசுகையில், “பெட்ரோல், டீசல் சம்பந்தமாகவும், எல்பிஜி சம்பந்தமாகவும் சொல்கிறேன். முதலில், எம்.எஸ்.எச்.எஸ்.டி. பெட்ரோல் அண்ட் டீசல், மோட்டார் ஸ்பிரிட் அண்ட் டீசல் எடுத்துக் கொண்டால், முதலில் கையிருப்பு, இப்போதைக்கு நம்முடைய சப்ளை செய்கின்ற தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பி.பி.சி., ஐ.ஓ.சி., எச்.பி.சி.னுடைய நிறுவனங்களிலேயே நமக்கு ஸ்டாக் பைப்லைன்ஸ் மூலமும், இரயில் வேகன் மூலமும் வருகிறது. இன்றிலிருந்து இருப்பே ஒன்பது நாளைக்கு வரும். அது இல்லாமல், தொடர்ந்து பைப்லைனிலும், வேகனிலும், அனைத்து இடங்களிலிருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறோம். அதனால், இப்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு எந்தவிதமான தடையும் இருக்காது. இரண்டு நாட்களாக, குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பம்ப் இருக்கும் இடத்தில் சரியான கூட்டமாக இருந்தது.
எல்லோருமே ஒரு நாளைக்கு எடுக்கவேண்டிய அளவை விட இரண்டு மடங்கு பெட்ரோல் பிடித்திருக்கிறார்கள். எங்களுக்கு அதனுடைய புள்ளி விவரங்கள் வந்தபொழுது பார்த்தால், கிட்டத்தட்ட 100% பெட்ரோல் விற்பனையும், 75% டீசல் விற்பனையும் ஒரே நாளில் கூடியது. இதுதான் நாம் பீதியாவதற்கு காரணம்.
அதற்கடுத்து, நேற்று உடனே குறைந்துவிட்டது. 21% - 20% தான். இன்றைக்கு காலையில் சில பெட்ரோல் பங்கில் பார்த்தபோது, அதிகமான அளவில் கூட்டமே இல்லை. ஆதலால், இருப்பு நம்மிடம் இருக்கிறது. ஒன்பது நாட்களுக்குப் பிறகும், வந்துகொண்டும் இருக்கிறது. இதில் பீதியாக வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து நிறுவனங்களும் அரசுடன் இணைந்து செயல்பட்டு கண்டிப்பாக நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யப்படும்.
அடுத்தது எல்பிஜி டொமஸ்டிக் பொறுத்தவரை, மத்திய அரசு அறிவிப்பின்படி 25 நாளைக்கு ஒரு தடவை நகர்புறங்களில் இருக்கின்ற வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர் கொடுக்கப்படும். நம்முடைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக தான் இந்த கட்டுப்பாடு. பிறது, கிராமப்புறப் பகுதிகளில், 45 நாளைக்கு ஒரு முறை. இருப்பு இருக்கிறது. அரசாங்கமும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த மாதம் முடிகின்ற வரைக்கும் இருப்பு இருக்கிறது.
அடுத்தது வணிகம் எரிவாயு - அதாவது வியாபாரங்களுக்கு தரப்படும் எரிவாயு சிலிண்டர்ஸ் நமக்கு ஒட்டுமொத்தமாக 20% வரை என்ன போயிக்கொண்டு இருந்ததோ அதை கொடுக்கவேண்டும். ஏனென்றால், வீடுகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். 20% வரை கொடுக்கலாம் என்று வியாபார நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதிலேயே முன்னுரிமையாக மருத்துவமனை, அனைத்துவிதமான மாணவர்கள் தங்கும் விடுதி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீதி இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு குழுவும் இணைந்து, ஆயில் நிறுவனங்கள் எல்லாம் மீதி இருக்கின்ற அளவுகளில் ஒரு முன்னுரிமையை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள் பேசுகையில், முதலமைச்சர் இரண்டு குழுக்கள் அமைத்திருக்கிறார்கள். ஒன்று, வீட்டுக்கான, வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு முறைப்படுத்த. அதற்கு உள்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME). அதேபோன்று, தொழில் துறை மற்றும் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை - அந்த குழு தொழிற்சாலைகள், உணவகங்கள், கேண்டீன்கள், உணவு தயாரிக்கும் கூடங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டின் ஒதுக்கீடு. அதை விநியோகம் செய்வதற்கு அவர்கள் அறிவுரை வழங்குவார்கள், கண்காணிப்பார்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இருக்கக்கூடிய அந்த குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் அதன் பிறகு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியோரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய அன்பான வேண்டுகோள் என்வென்றால், அதிகாரப்பூர்வமாக உங்களுக்கு ஏற்கனவே பலமுறை முதலமைச்சர் அவர்களும் இதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பல்வேறு முறை நம்முடைய செயலர்களும், அதேபோன்று தலைமை செயலரும் சொல்லி இருக்கிறார்கள். இது ஒன்றிய அரசிடம் நாம் தொடர்ந்து கலந்து பேசி, outside issue என்பதால் அவர்களுக்கு என்ன இவர்கள் content நமக்கு சொல்கிறார்களோ, அந்தத் தகவல் வந்தவுடன் உடனுக்குடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்ததாக, தயவுசெய்து இந்த நேரத்தில் வதந்திகளை தேவையில்லாமல் சில பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், அந்த வதந்திகளை நம்பக்கூடாது. இன்னொன்று கள்ளச் சந்தை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, தேவையில்லாமல், இந்த நேரத்தில் இதுபோன்று தவறுகளில் ஈடுபட வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல் இவர்களிடம் இருந்து கிடைக்கிற தகவல் இவர் நேரடியாக சொல்லுவார்கள், இல்லையென்றால் எங்கள் மூலமாக நாங்கள் சொல்லுவோம். அதைத்தான் நம்ப முடியும்.
இதற்கிடையில், முதலமைச்சர் அவர்கள் இடைப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!