Tamilnadu
250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் (Obstetrics & Gynaecology) 182 சிறப்பு மருத்துவர்களும், கதிரியக்கவியல் (Radiology) துறையில் 37 சிறப்பு மருத்துவர்களும்;
தடயவியல் மருத்துவத் துறையில் (Forensic Medicine) 24 சிறப்பு மருத்துவர்களும், முதியோர் மருத்துவத் துறையில் (Geriatrics) 6 சிறப்பு மருத்துவர்களும், இருதய அறுவை சிகிச்சை துறையில் (Cardio-Thoracic Surgery) 1 சிறப்பு மருத்துவரும், என மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல்;
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நலவாழ்வு பெறவேண்டும் என்கிற உயரிய நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவச் சிகிச்சை அளித்திடும் “மக்களைத் தேடி மருத்துவம்”, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”;
சிறப்பு மருத்துவ சேவைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து ஆண்டு காலத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,977 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 1,011 மருந்தாளுநர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், உள்ளிட்ட இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என மொத்தம் 12,177 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகள், 37 மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 262 அரசு தாலுக்கா மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் (Obstetrics & Gynaecology) 182 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும்;
கதிரியக்கவியல் (Radiology) துறையில் 37 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், தடயவியல் மருத்துவத் துறையில் (Forensic Medicine) 24 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், முதியோர் மருத்துவ துறையில் (Geriatrics) 6 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், இருதய அறுவை சிகிச்சை துறையில் (Cardio-Thoracic Surgery) ஒரு சிறப்பு மருத்துவர் பணியிடத்திற்கும், என மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Also Read
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!