Tamilnadu
ம.தி.மு.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டி - முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக இக்கூட்டணி கம்பீரமாக நிலைத்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்களான எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த குழுத் தலைமையில் தொகுதி உடன்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சில கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக கட்சிக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி. மற்றும் ம.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, ம.தி.மு.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஜப்பான் நிறுவனம், கலிஃபோர்னியா பல்கலை., பெர்க்லியோடு ஒப்பந்தம்… அரசின் அதிரடி மூவ் - முழு விவரம்!
-
ஈரான்-இஸ்ரேல் போரால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!
-
சென்னையில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மாளிகை, அச்சகம் ஆகியவை திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!