Tamilnadu
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. மேலும், இதை வலுசேர்க்கும் வகையில், தே.மு.தி.கவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளும், மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகும்.
Also Read
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க-வின் கோரிக்கையை இன்று கையில் எடுத்துள்ள இளைஞர்கள் : டெல்லியில் மாபெரும் போராட்டம் - முரசொலி!
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!