Tamilnadu
31.50 இலட்சம் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள்.. வழங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன்!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 31.50 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கும் திட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் தறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உள்ளிட்ட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, 2025-2026ம் நிதியாண்டில் ரூ.229 கோடி அரசு மானியத்தில் இருந்து கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம், முடக்க ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு பெற்ற உறுப்பினர்களையும் சேர்த்து 2025-26ம் நிதி ஆண்டில் ரூ. 936.65 கோடி மதிப்பிலான மேற்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் (07.05.2021 முதல் .31.01.2026 வரை) 37.75 இலட்சம் பதிவு பெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் ரூ.3317.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, தொழிலாளர் நலனுக்காக தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற அமைப்புசாரா பெண் / திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1,00,000/- மானியமாக வழங்கப்படுகிறது. 31.12.2025 வரை 2333 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மானிய விலையில் புதிய ஆட்டோ ரிக்சாக்கள் ரூ.23.33 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் ஓய்வூதியம் ரூ.1,000/-லிருந்து ரூ.1,200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிக் தொழிலாளர்களுக்கென பெருநகரங்களான சென்னையில் அண்ணா நகர் மற்றும் தி.நகரிலும், கோயம்புத்தூரில் காந்திபுரம் மற்றும் R.S. புரம் ஆகிய இடங்களில் மாநகராட்சிகள் மூலமாக ஓய்வுக்கூடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 31.12.2025 வரை 23,704 கிக் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்கும் செலவினத்தில் ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனத்திற்கான குழு காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
கட்டுமானத் தொழிலாளர்கள் திறனை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளும் வகையில் 50,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும் பராமரிப்பும் இல்லாத, கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 தொழிலாளர் நலக் கூடங்கள் ரூ.20.25 கோடி செலவில் அமைக்கவும் மேலும், 10,000 உயர்கல்வி பயிலும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் பயிற்சி முதலமைச்சர் அவர்களால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
Also Read
-
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி சந்திப்பு கூட்டம்... எங்கு? எப்போது? - முழு விவரம்!
-
“சமூக நலத்திட்டங்களை, சமூக உரிமைகளாக கருதும் திராவிட மாடல் அரசு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!- விவரம் உள்ளே!
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!
-
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!