Tamilnadu
“தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அளிக்காதது ஏன்?” : பட்ஜெட் மீதான விவாதத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
ஒன்றிய அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், தமிழ்நாட்டின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திட்டச் செலவுகளில் 11 சதவீதம் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டதாகவும், தற்போது அது பூஜ்ஜியமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
வாழை ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்கும் மேல் உள்ளதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டின் வாழை விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு என்ன ஆனது? விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை என்றும் டி.ஆர்.பாலு கேள்விகளை எழுப்பினார்.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!