Tamilnadu
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு MP-க்கள் : முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் MP!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டிற்காகவும் தங்களது தொகுதிக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து SDOT அமைப்பு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில் இதில், தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிக கேள்விகளுக்கு கேட்டு சிறப்பாக உரை நிகழ்த்தியதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டு அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்களான மாணிக்கம் தாக்கூர் 2வது இடத்தையும், ஜோதிமணி 3வது இடத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி., நவாஸ் கனி 4வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் 5வது இடத்தை பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அளவில் தமிழச்சி தங்கபாண்டியன் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, இவரது நாடாளுமன்ற வருகைப் பதிவு 87% ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியுடன் (87%) சமமாக உள்ளது.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!