Tamilnadu
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காதது ஏன்? : நாடாளுமன்றத்தில் பி.வில்சன் MP கேள்வி!
தமிழ்நாட்டில் இயங்கும் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களின் (PACS) எண்ணிக்கை மற்றும் அவற்றில் சட்டப்பூர்வமாக தணிக்கைகள் முடிக்கப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தணிக்கையாளர் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை அல்லது இன்னும் கணினிமயமாக்க நிலுவலையில் உள்ள சங்கள், தாமதத்திற்கான காரணங்கள் என்ன? முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் கணினிமயமாக்கல் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான சங்கங்களில் இன்னும் கணினி வழி அல்லது டிஜிட்டல் தணிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு? NEP, 2020 அல்லது PM SHRI பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக நிதியைத் தடுத்து நிறுத்துவது நியாயமற்றது என்று கருதி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு EWCY&S மீதான நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளபோதிலும் நிதி விடுவிக்கப்படாததற்கான காரணங்கள் என்ன?
இவ்வாறு பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிஎஃப் பெரம்பூரில் உள்ளூர் ஆட்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்குக!
தமிழ்நாடு உட்பட நாட்டில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் மற்றும் அம்ரித் பாரத் இரயில்களின் பட்டியல் என்ன? என மக்களவையில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அதிவேக எக்ஸ்பிரஸ் இரயில்கள் தயாரிக்கும் ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் விவரங்கள்? ஐசிஎஃப் பெரம்பூர் உட்பட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசு முன்மொழிகிறதா? ஜனவரி 1, 2026 நிலவரப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை என்ன? எனும் பல்வேறு விசயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!