Tamilnadu
கோவையில் “ஜவுளி தொழில் மாநாடு 360!” : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?
தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பினைச் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித் துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாவது ‘ஜவுளி தொழில் மாநாடு 360’ கோயம்புத்தூர் மாநகரின் கொடிசியா வளாகத்தில் 29.01.2026 முதல் 30.01.2026 வரையிலான இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.01.2026 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி (Exhibition), அழகு நயப்பு காட்சி (Fashion Show), வாங்குவோர் – விற்போர் சந்திப்பு (Buyer-Seller Meet), ஐந்து கருத்தரங்குகள் (Panel Discussion) மற்றும் தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள PM-MITRA ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான Roadshow ஆகியவை நடைபெறவுள்ளன.
மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் 2025-26, துணிநூல் துறை மற்றும் கைத்தறி துறை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியங்கள் ஆகியற்றை வழங்கவுள்ளார்.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறையாக... உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026ஐ முன்னெடுக்கும் தமிழ்நாடு: முக்கிய விவரங்கள்!
-
“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
-
மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எனபது பியூஸ் போன பல்புதான்!” : முரசொலி தலையங்கம்!
-
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை : அதிர்ச்சியளித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!