Tamilnadu
🔴#LIVE : சட்டப்பேரவை கூட்டத்தொடர் : “இனி ஆளுநர் உரை இருக்காது” - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம்!
சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை!
என்றுமே இருமொழிப் பாடத்திட்டமே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை, திராவிட மாடல் அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உறுதியாக எடுத்துரைக்கிறது.
1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இருமொழிக் கல்வி திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போலக் காத்து வருகிறோம். நம் உயிரோடும் உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழைக் காப்பதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. எந்தச் சூழ்நிலையிலும் இக்கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் திராவிட மாடல் அரசு ஏற்காது!
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு!
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது!
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம்!
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
ஆளுநர் உரை என்ற நடைமுறைக்கு விலக்கு!
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்!
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
ஆதிதிராவிடர் நலனில் திராவிட மாடல் அரசு!
திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
* சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
* ‘காலனி’ என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
1.12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு!
“ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதில்லை.”
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
36 கலைக் கல்லூரிகள் உருவாக்கம்!
“தமிழ்நாடு முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன!”
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் தமிழ்நாடு!
குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
மாபெரும் மக்கள் இயக்கம்!
“முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம், திராவிட மாடல் ஆட்சியில் ஆல்போல் தழைத்து, இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.”
– சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை!
மகளிர் மேம்பாட்டில் அளப்பரிய சாதனைகள்!
மகளிர் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அளப்பரிய பல சாதனைகளை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1.30 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் எண்ணிக்கை 40.3% ஆக உயர்ந்துள்ளது.
– சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு!
உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!
“புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இடைநிற்றல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டிலேயே உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது!”
– சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு!
ஆளுநர் உரை இனி இருக்காது!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெறும் என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கையை அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆளுநர் உரை படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது!
ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல், ஆளுநர் சென்றதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம், இப்பேரவையில் ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது.
- சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் !
மாநில அரசுகளுக்கு இடையூறு செய்யும் ஆளுநர்கள்!
ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும் அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் வாடிக்கையாக இருப்பது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடையூறாக இருந்து இப்படி செயல்படுவது என்பது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. ஒருநாள் செய்தியாக இதனை கடந்துவிட முடியாது.
- சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆளுநர் உரை படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது!
ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல், ஆளுநர் சென்றதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம், இப்பேரவையில் ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது.
- சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் !
ஆளுநர் செயல் ஏற்புடையதல்ல!
பொது மேடைகளில் அரசியல் பேசியும், மாநில அரசு குறித்து அவதூறு பரப்பியும் வருகிறார் ஆளுநர் ரவி. அது அவரது சொந்த விருப்பம் என்று கருதினாலும், அத்தகைய முயற்சியை இங்கும் அவர் செய்ய முனைவது ஏற்புடையதல்ல.
- சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆளுநர் என்பவர் இப்படிதான் இருக்க வேண்டும்!
தமிழ்நாடு சட்டமன்றம் எட்டரை கோடி தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசியலமைப்பு சட்டமும் எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அதற்கு மாறாக செயல்படுகிறார்.
- சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆளுநர் செயல் வருத்தத்திற்குரியது!
“'ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை' என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், அதனை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்தபோதிலும் அந்த பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது தவறியதில்லை. அவர்களது வழியை பின்பற்றி நானும், அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை."என்று கடந்த 2023, ஏப்ரல் 10 அன்று எடுத்துரைத்தேன்.
அந்த கொள்கையையொட்டியே ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் ஆணையிட்டேன். ஆனால் ஆளுநரோ ஏற்கனவே நடந்துகொண்டது போலவே இன்றும் நடந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது.
- சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மக்கள் சபையை அவமதித்த ஆளுநர் ரவி!
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் செயலாகும்.
- ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்!
ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் நிலையில், தேசிய கீதத்துடன் பேரவை தொடங்க வேண்டும் எனக்கூறி வெளியேறினார் ஆளுநர். கடந்த 2 ஆண்டுகளும் இதே காரணத்தை காட்டி ஜனநாயக கடமையை ஆற்றாமல் ஆளுநர் வெளியேறினார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறினார்.
Also Read
-
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : இனி ஆளுநர் உரைக்கு ஆப்பு.. முதலமைச்சர் கொண்டு வந்த அதிரடி தீர்மானம் என்ன?
-
சாகித்ய அகாடமி விருது நிறுத்தத்தின் எதிரொலி.. “பா.ஜ.க. அரசின் தலையில் விழுந்த இரட்டை அடி!” - முரசொலி!
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!