Tamilnadu
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!
பாலிவுட் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் பாகுபாடு குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில், ”இந்தித் திரையுலகில் கடந்த 8 ஆண்டுகளில் அதிகார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் சென்றுள்ளது. மேலும் மதம் சார்ந்த அல்லது சமூக ரீதியான காரணங்களாலேயே தமக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.
இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ”தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் இந்தியராக இருப்பதையும், இங்குள்ள பன்முகத்தன்மையையும் பெருமையாகக் கருதுகிறேன்" என கூறி வீடியோ ஒன்றையும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
இருந்தும் பா.ஜ.கவைச் சேர்ந்த கங்கனா ரனாவத், ஷோபா டே போன்றோர் ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நான் ஏ.ஆர். ரகுமானுடன் நிற்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளங்களைக் கடந்து உலகளாவிய கலைத் தொண்டாற்றும் ஒரு கலைஞரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவது மற்றும் வெறுப்பைப் பரப்புவது மிகவும் கவலையளிக்கிறது
இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பது.வெறுப்புக்கும் பாரபட்சத்திற்கும் பலியாவதை விட, ரகுமான் போன்ற ஒரு மேதைக்கு நாடும் மக்களும் நன்றியுடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!