Tamilnadu
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழும், தமிழ்ச்சமுதாயமும், தமிழ்நாடும் தரணியில் என்றும் தலைநிமிர்ந்து புகழ்க்கொடி நாட்டிட வேண்டும் என்னும் தலையாய உணர்வோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு பொருளாதாரத்தில் நம்பர் 1 மாநிலம் !
தொழில் வளர்ச்சியில் வறுமை ஒழிப்பில் ஏற்றுமதியில் நம்பர் 1 மாநிலம் !
உயர்கல்வியில் நம்பர் 1 மாநிலம் !
பெண்கள் தொழில் முனைவோர் ஆவதில் நம்பர் 1 மாநிலம் !
மருத்துவ உதவிகளை மக்களுக்கு அளிப்பதில் முதன்மை மாநிலம் !
போக்குவரத்து வசதிகளை அளிப்பதில் முதன்மை மாநிலம் !
சாலை வசதிகளில் முன்னணி மாநிலம் !
விளையாட்டு கலை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதில் முன்னணி மாநிலம் !
வேளாண் பொருள்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலம்!
முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் அனைத்து வகையிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு!
இந்நிலையில், இந்த ஆண்டில் நீர்வளமும், நிலவளமும் செழித்து உற்பத்திகள் பெருகி உழவர் சமுதாயம் உவகையில் மகிழ்ச்சிப் பொங்கலைச் சந்தித்துள்ளது!
நெல் கொள்முதலில் புதிய சாதனை
2025-2026 ஆம் ஆண்டின் நெல் கொள்முதலில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2006 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 15 இலட்சத்து 6 ஆயிரத்து 851 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 344 விவசாயிகளுக்கு 3,782 கோடியே 86 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டு, விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த ஆட்சியைப் பாராட்டியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ள பொங்கல் விழா தமிழ் மக்களின் பண்பாட்டுப் பெருமைகளை முழங்குவதாக வெற்றிகரமாக நடந்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியின் மாண்புகளைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.
பொங்கல் விழாவைத் தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, 2 கோடியே 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழக்கமாக அளிக்கப்படும் உணவுப் பொருள்களுடன் தலா 3000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழு நீளக் கரும்பு, ஆகியவற்றையும் புத்தாடைகளையும் வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
பொங்கல் விழாவுக்கு முன்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும், பொங்கல் பரிசாக தலா ரூபாய் 3000 வழங்கினார்கள். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் வழங்கினார்கள். தேர்தல் வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் 12 இலட்சம் அரசு ஊழியர்கள் வாழ்வில் நிலையான இன்பம் நீடிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி 1.1.2026 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
தாயுமானவராகிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இத்தகைய கொடைத்தன்மை வாய்ந்த உத்தரவுகளால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மகளிர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவராலும் சாதி, சமய வேறுபாடுகள் இன்றிச் சமத்துவப் பொங்கல் விழாவாக எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டுள்ளது.
பட்டிதொட்டி எங்கும் பொங்கல் விழாக்களில் குழந்தைகளுக்குப் பாட்டுப்போட்டிகள், குறள் ஒப்பித்தல் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஆகியவற்றுடன் விளையாட்டுப் போட்டிகளும், சிலம்பப் போட்டிகளும் நடத்தப்பட்டுப் பரிசுகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.
வீதிகள் தோறும் குழுகுழுவாக மகளிரின் திறன் மணக்கும் கோலப் போட்டிகள் நடைபெற்று வீடுகளின் வாயில்களை அணிசெய்து பரிசுகளைப் பெற்றுத் தந்துள்ளன.
அறிஞர் பெருமக்களுக்கு 13 அரசு விருதுகள்
அய்யன் திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு இ.ஆ.ப., அவர்களுக்கு திரு.வி.க. விருது முதலான 13 அறிஞர் பெருமக்களுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டியுள்ளார்கள்.
கலைச் சங்கமம் வாயிலாக கிராமியக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் சிறப்பு
சென்னை மாநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியமான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சென்னை மாநகரில் 20 இடங்களில் தமிழ்ச் சங்கமக் கலை விழாக்கள் நடைபெற்று தமிழ்நாட்டின் கலைகள் சிறப்பிக்கப்பட்டன; கலைஞர்களும் பாராட்டப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடித்தல் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் காளைகளைப் போல் இளைஞர்கள் களித்து மகிழ்ந்தனர். பொது மக்களுக்கும் களிப்பூட்டினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் விழாவில் பங்கேற்றுப் பெருமை சேர்த்ததுடன், ஏறுதழுவுதலில் ஆர்வமுடன் பங்கேற்று அதிக அளவில் காளைகளைப் பிடித்து வெற்றி காணும் சிறந்த வீரர்களுக்கு அரசின் சார்பில் கால்நடைத்துறையில் அரசு வேலைகள் வழங்கப்படும் என ஒரு முக்கிய அறிவிப்பினையும் வெளியிட்டார்கள். அத்துடன் 2 கோடி ரூபாய்ச் செலவில் சல்லிக்கட்டுப் பயிற்சி மையமும், உயர்தர சிகிச்சை மையமும் அமைக்கப்படும் என்றும் அறிவித்து தமிழ்ப் பண்பாட்டுப் பெருமைகளுக்கு மேலும் சிறப்புகள் சேர்த்துள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்களின் இத்தகைய சிறப்பான முன்னெடுப்புகளால் சங்க காலம் தொட்டுத் தமிழ்ச்சமுதாயம் கொண்டாடிவரும் பொங்கல் விழா இவ்வாண்டில் தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது!
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?