Tamilnadu

நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!

அனைத்து இடங்களிலும் பாஜக தனது மோசடி வேலைகளை செய்து வருகிறது. பல இடங்களிலும் கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல், ரௌடித்தனம், பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பாஜகவினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது விதிவிலக்கல்ல.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை தமிழ்நாடு போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி ரூ.4.5 கோடி பண மோசடி செய்த பாஜக மகளிரணி துணைத் தலைவர் மதிவதனகிரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக மாநில மகளிரணி துணை தலைவராக செயல்பட்டு வருபவர் மதிவதனகிரி. இவர், டிரேடிங்கில் அதிக லாபம் பார்க்கலாம் எனக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுள்ளார். சுமார் ரூ.4.5 கோடி அளவுக்கு பணம் பெற்றுவிட்டு, லாபத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியுள்ளார். அதோடு பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மதிவதனகிரியிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் மதிவதனகிரி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தொடர்ந்து அவர் குறித்து பல்வேறு விசாரணை மேற்கொண்ட போலீசார், மதிவதனகிரி ஓசூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கி இருந்த மதிவதனகிரியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Also Read: “காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!