Tamilnadu

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் வாகன விற்பனை 8.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

அதில், தமிழ்நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 21 லட்சத்து 18 ஆயிரத்து 489 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டை விட, 8.4 சதவிகிதம் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

இவற்றில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 16 லட்சத்து 40 ஆயிரமாகும். மின்வாகனங்கள் எண்ணிக்கை 2024ல் ஒரு லட்சத்து 34 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மேலும், ஒட்டுமொத்த வாகன விற்பனையில், 40 சதவிகிதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை சேலம் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Also Read: மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?