Tamilnadu
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி, ஏழை எளிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பள்ளிக்குச் சென்று கல்வி பெறுவதை உறுதி செய்யும் திட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
2023–24ஆம் கல்வியாண்டு வரை, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டு, அரசு போக்குவரத்து கழக அலுவலர்களால் தொகுக்கப்பட்டு அச்சகங்கள் வழியாக பயண அட்டைகள் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு கால தாமதம் ஏற்படுவதுடன் போக்குவரத்து கழக மற்றும் பள்ளிக் கல்வி அலுவலர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய சூழல் இருந்தது.
மேற்கண்ட நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில், 2024–25 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் EMIS இணையதளத்தில் உள்ள மாணவர் தரவுகளை தொகுத்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் அச்சிடப்பட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக பயண அட்டைகள் வழங்கப்பட்டன. (2023–24 - 20.06 லட்சம், 2024–25 - 25.01 லட்சம் பயண அட்டைகள்).
இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டில் (AY 2025-26), அனைத்து தகுதியான மற்றும் தேவையுள்ள மாணவ, மாணவியர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை எளிய முறையில் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில், பள்ளி கல்வித் துறையின் EMIS இணையதளத்தில், விருப்பமுள்ள அனைத்து மாணவ, மாணவியரின் விபரங்கள் பெறப்பட்டு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் விரைந்து தயாரிக்கும் பணி போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில் (AY 2025-26) சுமார் 60.00 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் மாணவர் நலன், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் உறுதியான அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
இதனால், தேவை உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயன்படுத்தி பள்ளிக்கு எளிதாக பயணம் செய்யும் வசதியை, மாணவர்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை உருவாக்கியுள்ளது.
Also Read
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!