Tamilnadu
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் அருகே கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் இரண்டாம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அந்த வாகன இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :-
நேற்று சபரிமலை சென்றேன் அங்கு தமிழக பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை ஆய்வு செய்தேன். இதுவரை 2000 நபர்கள் அங்கு பயன்பெற்று உள்ளனர். அதே போல சென்னையிலும் சபரிமலை பற்றி தகவல் அறிய 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த ஆண்டு 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பபட்டது. இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் இதுவரை 3,956 திருக்கோயில்களுக்கு குடழுழக்கு நடந்துள்ளது. 4 ஆயிரமாவது குடமுழுக்காக வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெறும்." என்றார்.
=> தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, ஆன்றோர் சான்றோர்களிடம் இந்த துறை கொடுக்கப்படும் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கூறியது குறித்த கேள்விக்கு...
முதலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். குறிப்பாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். திமுக சார்பாக சாதாரண தொண்டனை வைத்து அவரை மண்ணை கவ்வ வைப்போம். அரசியல் செல்வாக்கு இல்லாதவர் கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு அறிக்கைகளை விட்டு, அவரை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். ஆனால் அவர் சார்ந்த கட்சியோ அவரைக் கண்டு கொள்ளவில்லை.
=> தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அரசு அனுமதி அளிப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு...
கட்சியை விட்டு விலகி சென்ற நபர்கள் கூட மீண்டும் கட்சியில் சேர்வதற்கு தயாராக இருந்தாலும், அவர் இணைக்காமல் இருப்பதுதான் பாசிசம். பழனிசாமிதான் பாசிச அரசியல் செய்து வருகிறார்.
நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது பாஜக, இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஒருபோதும் இதனை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்க மாட்டார்.
ஏற்கனவே வேலோடு ஒருவர் சுற்றினார்.. ஆனால் பலனில்லை. ஏனெனில் முருகனுடைய அருள் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பக்கம் இருக்கிறது. ஜாதி, மத, இன மோதல்களை தமிழகத்தில் உருவாக்க நினைத்தால், அதனை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.
=> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அன்புமணி பேசியது குறித்தான கேள்விக்கு...
அரசியல் வேறு ஆன்மீகம் வேறு. நீங்கள் ஆன்மீகத்தை வளருங்கள், ஆன்மீகம் சார்ந்த கலையை வளருங்கள்... ஆனால் "அதையெல்லாம் செய்யமாட்டோம்... நாங்கள் கலவரத்தை தான் வளர்ப்போம்" என்ற சக்திகளுக்குகெல்லாம் தமிழகத்தில் இடமில்லை." என்றார்.
Also Read
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!