Tamilnadu

“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் இளைஞர் அணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலாளர் பரமசிவம் வரவேற்றார். தி.மு.க கழக பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியின் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி,அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பேசிய ஐ.லியோனி,” தமிழ்நாட்டில் மதவெறியை தூண்டும் பா.ஜ.க-வின் முகத்திரையை கிழிக்க போகின்ற தேர்தல்தான் 2026 தேர்தல். பா.ஜ.கவிற்கு பஜனை பாடிக் கொண்டிருக்க கூடிய எடப்பாடி பழனிசாமிக்கும் மக்கள் மீண்டும் தோல்வியை பரிசாக கொடுப்பார்கள்.

இந்த தேர்தலில் சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார். 2026 தேர்தலில் வெற்றி பெற்று, 2 ஆவது முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோட்டையில் கொடியேற்றுவார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!