Tamilnadu
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, மோகன்லால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பண்பாடு கொண்டது தமிழ்நாடு என தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ் திறைத்துறையில் முக்கிய பங்காற்றியதோடு புதிய மாற்றத்திற்கும் வழிவகுத்ததை சுட்டிக்காட்டிய அவர், தென்னிந்திய திரைத்துறையின் தலைநகரமாக சென்னை திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக கூறிய அவர், இதன் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!