Tamilnadu

“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!

தமிழ்நாட்டில் சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டு இருக்கிறார். இங்கு பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியல் பகல் கனவாக மட்டுமே இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”வட மாநிலங்களில் வெறுப்பு அரசியலை பரப்புவது போல் தமிழ்நாட்டில் பா.ஜ.க பரப்ப முயற்சிக்கிறது.தமிழ்நாட்டில் சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டு இருக்கிறார். இங்கு பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியல் பகல் கனவாக மட்டுமே இருக்கும்.

தமிழ்நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் சனாதனத்தை அழிக்க வேண்டும் என கூறவில்லை மக்களை பிளவுபடுத்தக்கூடாது என்பது தான் கூறுகிறோம். சமாதானத்தை போற்றும் அரசு இது. சனாதனத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

அ.தி.மு.க-வில் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவின் அடிமையாகி விட்டது அ.தி.மு.க. எச்.ராஜா போன்ற தரம் தாழ்ந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருப்பது சாபக்கேடு. அவர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!