Tamilnadu
இரயில் பயணிகள் கவனத்திற்கு.. Sleeper கோச்சிலும் இனி தலையணை, போர்வை.. தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!
இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை.
இந்த சூழலில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிக்கும் பயணிகளுக்கு குறைந்த விலையில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 10 இரயில்களில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இந்த சேவையின் கீழ் வரும் 10 இரயில்கள் பட்டியல் வருமாறு :-
1) 12671 / 12672
நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (MAS-MTP-MAS)
2) 12685 / 12686
மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (MAS-MAQ-MAS)
3) 16179 / 16180
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (MS-MQ-MS)
4) 20605 / 20606
திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (MS-TCN-MS)
5) 22651 / 22652
பால்காட் எக்ஸ்பிரஸ் (MAS-PGT-MAS)
6) 20681 / 20682
சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (MS-SCT-MS)
7) 22657 / 22658
தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (TBM-NCJ-TBM)
8) 12695 / 12696
திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (MAS-TVC-MAS)
9) 22639 / 22640
ஆலப்புழா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (MAS-ALLP-MAS)
10) 16159 / 16160
மங்களூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (MS-MAQ-MS)
Also Read
-
டித்வா புயல் : “அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்” - அமைச்சர் மா.சு.!
-
இலங்கையை நாசமாக்கிய டிட்வா புயல்... 40 பேர் உயிரிழப்பு... ஏராளமானோர் காணாமல் போனதால் அதிர்ச்சி !
-
மக்களுக்கு உதவிட தயார் நிலையில் இருக்கவும் : கழக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
டிட்வா புயல் : அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசினுடைய கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!