Tamilnadu
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி - நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து,ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கட்டப்பட்ட ஆதிக்கக் கோட்டையினை சுயமரியாதை கருத்துகளால் தகர்த்த 'ஈரோட்டு பூகம்பம்' தந்தை பெரியார் அவர்களின் நினைவிடம் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்ய அயராது உழைப்போம் என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்... எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் சொன்னது என்ன?
-
“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!” : உதயநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!