Tamilnadu
தாய் கண்முன்னே உயிரிழந்த குழந்தை : வாணியம்பாடியில் நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளன.
இந்நிலையில், இன்று திலகா தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வழக்கமாக பள்ளிக்கு அனுப்ப, தனியார் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட வந்துள்ளார். அப்போது உடன் ஒன்றரை வயது கைக்குழந்தையையும் அழைத்து வந்துள்ளார்.
அப்போது, பேருந்தில் மகள்களை ஏற்றும்போது திடீரென ஒன்றரை வயது குழந்தை பேருந்தின் சக்கரம் அருகே சென்றுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நேரத்தில் பேந்தை இயக்கியதும், சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண்முன்னே ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!
-
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!
-
“பணிநியமனம் மற்றும் பதவி உயர்வால் 4.5 ஆண்டுகளில் 1 இலட்சம் பேர் பயன்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!