Tamilnadu
”ராஜேந்திர பாலாஜி பேச்சில் காமெடி இருக்கும்! உண்மை இருக்காது!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, ஜெயராமபுரம் பகுதியில் திருவுருவச் சிலையுடன் கட்டப்பட்டு வரும் விடுதலை போராட்ட வீரர் பொல்லான் அரங்கத்தினை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ” எதிர்க்கட்சி தலைவராக நமது கழக தலைவர் இருந்தபோதே விடுதலைப் போராட்ட வீரர் பொல்லானுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரான பிறகு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு திருவுருவ சிலை வைக்க உத்தரவிட்டார்.
இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை இன்று நான் ஆய்வு செய்தனர். நவ.26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொல்லான் அவர்களின் சிலையை திறந்து வைக்க இருக்கிறார்.
மாநில அரசை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியில் அதிக முதலீடுகள் வந்துள்ளது. ராஜேந்திர பாலாஜி பேசுவது காமெடியாக இருக்கும். ஆனால் அதில் உண்மை இருக்காது. 2026 தேர்தலில் தி.மு.க ஆட்சிதான் என்து அனைவரும் தெரிந்த ஒன்றே” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!