Tamilnadu
Chennai One App - ரூ.1க்கு டிக்கெட் : இந்த சிறப்பு சலுகை பெறுவது எப்படி?
சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர்.
இந்த மூன்று சேவைகளையும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில் மாநகர போக்குவரத்து ஆணையம் சார்பில் சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை செப்.22 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பணமில்லா பரிவர்த்தனையின் கீழ் பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக பயணிகளுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அது,Chennai One செயலியில் UPI மூலம் ரூ.1 கட்டணம் செலுத்தி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய முடியும். இந்த சிறப்பு சலுகையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நடைமுறை இன்று முதல் அறிமுகமாகிறது.
மேலும்,தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள Chennai One செயலியை பயன்படுத்தி நவ.10 ஆம் தேதி மட்டும் 29,704 நபர்கள் டிஜிட்டல் பயணச்சீட்டுகளை பெற்று பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகம்” திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
மகளிர் நல்வாழ்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள்! : முழு விவரம் உள்ளே!
-
ஒடும் ரயில் - இளைஞர் செய்த செயல் : அதிர்ச்சியடைந்த பயணிகள்!
-
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக 3 பேருக்கு ஆயுள் தண்டனை! : குஜராத் நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு!