Tamilnadu
தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி? - முழு விவரம்!
இளங்கலை / முதுகலை / முனைவர் பட்டம் / முனைவர் பட்ட மேலாய்வாளர் போன்ற வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தினை 2024-2025 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000 வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும்.
2025-2026 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் “fellowship.tntwd.org.in” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 12.11.2025 நாளிலிருந்து 12.12.2025 நாள்வரை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மாணாக்கர்கள் மேற்காணும் திட்டத்தினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Also Read
-
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது... விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது... விவரம் உள்ளே!
-
UPSC மாணவர்களுக்கு ரூ.50000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
விடுமுறையை முன்னிட்டு 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எங்கிருந்து, எத்தனை பேருந்துகள் இயக்கம்? - விவரம்!
-
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : குற்றவாளி கருக்கா வினோத்-க்கு 10 ஆண்டு சிறை !
-
தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் : 3 நாட்கள் பயிற்சி - எங்கே? எப்போது?