Tamilnadu

தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

இது ஏற்கனவே நாளை காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒரு புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை புயலாகவும், அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒரு தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த மோந்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28 ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை