Tamilnadu

தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து அரசு செய்து வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படியான சூழலில் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் வேண்டுமென்றே அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு அவதூறு செய்தி இணையத்தில் ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளுக்காக ஏராளமான பனை மரங்கள் சட்டத்துக்கு புறம்பாக வெட்டப்பட்டதாக போலி செய்தி பரப்பப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்திருக்கிறது.

அதில், ‘இது தவறான தகவல். 2 தனிநபர்கள் தங்களின் பட்டா நிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனை மரங்களை உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளனர். அதற்கு இணையாக அரசாணை 238-ன்படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்த்திடவும் மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!