Tamilnadu
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிருக்காக குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட தோழி விடுதிகளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி என 9 நகரங்களில் இந்த விடுதிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்தில், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி, பல்கலைக்கழக முதுகலை மாணவர் நவீன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், விடுதி கட்டுமான பணி காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விடுதி கட்டும் பணியை கைவிடக்கோரி மனு அளிக்கப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இது போன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு சம்பந்தப்பட்ட மாணவர், படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி, 10,000 ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !