Tamilnadu
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
தி.மு.கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவரும், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளருமான மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மீண்டும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், “எழும்பூர் ரயில் நிலையம் சென்னையின் முக்கியமான ரயில் முனையங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்நிலையத்தில் குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் புறக்கணிக்கப்படுவது வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஊடகச் செய்திகள், மழைக்காலத்தில் ரயில் நிலைய நடை மேடை மற்றும் நடை மேம்பாலத்தில் மின்விளக்குகள் செயலிழந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, அனைத்து அடிப்படை வசதிகளும் இடையூறு இல்லாமல் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் விரிவான ஆய்வுக் கூட்டங்கள் விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டு, நிலையத்தின் முழுமையான பராமரிப்பு நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, நீண்டகால பராமரிப்புக்கான செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!