Tamilnadu
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், அக்.17 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
மேலும், பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கணிவுடன் அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணியிடம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிட ஏதுவாக, இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் 1) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம், 2)புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு மற்றும் 3)மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய 3 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, 16/10/2025 முதல் 19/10/2025 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
16/10/2025 முதல் 19/10/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,900 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
அக். 17 மாலை 8.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளில் 1,716 பேருந்துகளும், 2,165 சிறப்புப் பேருந்துகளில் 805 பேருந்துகளும் இயக்கப்பட்டு 92,427 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
16.10.2025 மற்றும் 17.10.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 4,184 பேருந்துகளில் 3,808 பேருந்துகளும், 2,925 சிறப்புப் பேருந்துகளில் 1,566 பேருந்துகளும் இயக்கப்பட்டு 2,28,840 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21/10/2025 முதல் 23/10/2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 4,600 பேருந்துகளும் என ஆக மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு விவரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 3,59,448 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 3,49,893 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட 32,620 பயணிகள் (30.54 சதவிகிதம்) கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.
மேலும் அக்.17 ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 91,564 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 ஆகிய தொலை பேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஆம்னி பேருந்துகளில் அதிககட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொது மக்களின் வசதிக்காக, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, (கோயம்பேடு) மேற்கூறிய 2 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!