Tamilnadu
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் இருந்த ரயில் நிலையங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படவுள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் படி அடையாறில் உள்ள Broken Bridge பகுதி, இந்திரா நகர் இரயில் நிலையம் அருகே உள்ள MRTS வழித்தடத்தின் கீழ் உள்ள பகுதி மற்றும் வேளச்சேரி இரயில் மேம்பாலம் ஆகிய இடங்களில் அழகுபடுத்துதல் மற்றும் இடங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அடையாறுப் பகுதியில் உள்ள Broken Bridge, இந்திரா நகர் இரயில் நிலையம் அருகில் உள்ள MRTS வழித்தடத்தின் கீழ் உள்ள பகுதி, மற்றும் வேளச்சேரி இரயில் மேம்பாலம் ஆகிய இடங்களை அழகுபடுத்துதல் மற்றும் இடங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்திற்கு (HUDCO Housing and Urban Development Corporation) ரூ.53 லட்சம் மதிப்பில் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னையின் நகர மேம்பாட்டிற்கான அழகுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை முன்னெடுப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
இந்த ஆய்வின் நோக்கம், சுமார் 14,120 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க Broken Bridge பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதாகும். கூடுதலாக, இந்த ஒப்பந்தம் இந்திரா நகர் இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள MRTS பாதைக்குக் கீழே (தோராயமாக 6,176 சதுர மீட்டர்) மற்றும் வேளச்சேரி இரயில் மேம்பாலத்தின் கீழே (வேளச்சேரி MRTS நிலையத்திற்கு அருகில் தோராயமாக 9,270 சதுர மீட்டர்) பகுதியை புதுப்பிப்பதற்கான திட்டங்களையும் வகுக்கிறது. இந்த இடங்கள் ஒளிரும் விளக்குகள் (dynamic lighting), சில்லறை விற்பனை நிலையங்கள் (retail outlets), மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் (children's play areas) ஆகியவற்றுடன் கூடிய ஒரு பல்துறைப் பொது இடமாக (multifunctional civic space) மாற்றப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக மேலாண்மை இயக்குநர் V.T.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பொது வசதிகளை மேம்படுத்துதல், ஆரோக்கியத்தை ஊக்குவித்தல், மேலும் சுற்றுலா, சமூக ஈடுபாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரிப்பதே இந்தப் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் " என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!