Tamilnadu
இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு... முக்கிய விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஏராளமானோர் இனிப்பு, கார வகைகளை வாங்குவார்கள் என்பதால், அதற்கான இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் :
1. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி குற்றமாகும். மேலும் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 63-ன் படி ரூ. 10 லட்சம் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிகக வாய்ப்பு உள்ளது.
3. பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும் தனித்தனியே பொட்டலமிடுதல் வேண்டும்
4. உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய் / நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. உணவு மூலப்பொருட்களை பலகையின் மீது மூடிய நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
6. பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
7. Gift Box -களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலர்ந்த பழங்கள். கொட்டைகள் (Nuts) போன்ற பொட்டலங்கள் கண்டிப்பாக லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
8. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
9. உணவு கையாளபவர்கள் வெற்றிலை புகையிலை மெல்லுதல், புகை பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிக்கும் வளாகத்தில் அனுமதிக்க கூடாது. பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
10. உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் பயிற்சி பெற்ற பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு சம்மந்தமான மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்ட क्र. WhatsApp NO. 94440 42322 & TNFSD Consumer App என்ற செயலி மூலம் தெரிவிக்கவும்.
Also Read
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
நேரடியாக பெங்களூரு சென்று ஆய்வு... TNSTC Multi Axle பேருந்தை ஓட்டி சோதனை நடத்திய அமைச்சர் சிவசங்கர் !
-
பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்...
-
திராவிட மாடல் ஆட்சியில் 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்பு! : அமைச்சர் சேகர் பாபு தகவல்!