Tamilnadu
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் [EDII-TN], குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது.
இந்த இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் விற்க ஒரு வழியை வழங்குகிறது. சந்தையில் பயன்படுத்த எளிதான டேஷ்போர்டு, எளிய பதிவேற்ற நடைமுறைகள், வாடிக்கையாளர்களுடன் நேரடி இணைப்பு போன்ற அம்சங்களும் உள்ளன.
உயர்தர உணவுப் பொருட்கள், அழகுப் பொருட்கள், வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ஹார்டுவேர்ஸ், கைவினைப் பொருட்கள், வீடு மற்றும் அலுவலகப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், எழுதுபொருட்கள், ஜவுளிப் பொருட்கள், பைகள், கம்பளங்கள், பரிசுப் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், விவசாயப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவற்றை நுகர்வோர் இந்த இணையவழி சந்தையில் வாங்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு :-
1) சிறு/குறு விற்பனையாளர்களுக்கு எளிய பதிவேற்ற முறைகள்.
2) தரமான பொருட்களை நியாயமான விலையில் நேரடியாக பெறுதல்.
3) சிறு தொழில்முனைவோரை ஆதரித்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குதல், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்வரும் இணையவழி சந்தையில் தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
தொடர்பு எண் : 9444459448 / 8668101901
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!