Tamilnadu
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.10.2025) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 137 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 39 கோடியே 29 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள்;
12 கோடியே 72 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 250 வீடுகள், 15 கோடியே 93 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம அறிவுசார் மையங்கள், 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 62 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள், என மொத்தம் 26 வாகனங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக 5 கோடியே 78 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் 25 அவசரகால ஊர்திகள், 4 கோடி ரூபாய் செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்;
அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிக் கட்டடங்கள்
கடலூர் மாவட்டம் – காட்டுமன்னார்கோயிலில் 2 விடுதிகள், சேத்தியாதோப்பு, திருவண்ணாமலை மாவட்டம் – வந்தவாசி, வேட்டவலம் மற்றும் புளியம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, விருதுநகர் மாவட்டம் – ஶ்ரீவில்லிப்புத்தூர், நாமக்கல் மாவட்டம் – செங்காரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் – இன்னாடு ஆகிய இடங்களில் 58 கோடியே 98 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 10 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டம் – கூடலூர், மு.பல்லடா, மதுரை மாவட்டம் – சொக்கிக்குளம், நாமக்கல் மாவட்டம் – இலத்துவாடி, வேலூர் மாவட்டம் – ஓட்டேரி, விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம், கடலூர் மாவட்டம் – கடலூர், திண்டுக்கல் மாவட்டம் – பழனி, திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் ஆகிய இடங்களில் 78 கோடியே 33 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 10 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள்;
என மொத்தம் 137 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்கள்
வேலூர் மாவட்டம் – பெருமுகை, இராணிப்பேட்டை மாவட்டம் – ஜாகீர்தண்டலம், திண்டுக்கல் மாவட்டம் – வி.குரும்பப்பட்டி, முருகன்பட்டி, பெரும்பாறை, தேனி மாவட்டம் – அம்மச்சியாபுரம், கரூர் மாவட்டம் – புன்னம், பெரம்பலூர் மாவட்டம் – பொம்மனப்பாடி, நத்தக்காடு, திருநெல்வேலி மாவட்டம் – கடம்பன்குளம், தூத்துக்குடி மாவட்டம் – திருமங்கலக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் – மனோஜிபட்டி, அகரப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் – கவரை மற்றும் கொந்தமூர், கடலூர் மாவட்டம் – சேமக்கோட்டை, மா.கொளக்குடி, ஊமங்கலம்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் – களத்தூர், இன்னாடு, மணியார்பாளையம், பாச்சேரி, திருவள்ளூர் மாவட்டம் – பூங்காத்தூர், தேர்வாய், கோலப்பன்சேரி, செங்கல்பட்டு மாவட்டம் – கிளாம்பாக்கம், பதுவஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – பாலூர், ஓரிக்கை, திருப்பூர் மாவட்டம் – கோவில்வழி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – காட்டூர் பாப்பாக்குறிச்சி, சோழமாதேவி;
சிவகங்கை மாவட்டம் – அதிகாரம், கோயம்புத்தூர் மாவட்டம் – தொண்டாமுத்தூர், சேலம் மாவட்டம் – மாட்டுக்காரனூர், ஈரோடு மாவட்டம் – பர்கூர், திருவண்ணாமலை மாவட்டம் – அரசவெளி ஆகிய இடங்களில் 39 கோடியே 29 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 37 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 250 வீடுகள்
பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நவீன முறையில் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பறை, மரக்கதவு, UPVC ஜன்னல், மின் இணைப்பு, Bio Septic Tank, பின் பக்க வராண்டா, மாடிக்கு செல்ல படிக்கட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 12 கோடியே 72 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 250 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 கிராம அறிவுசார் மையங்கள்
கடலூர் மாவட்டம் – காரைமேடு, திருப்பத்தூர் மாவட்டம் – துரையேறி, திருப்பூர் மாவட்டம் – கொலுமாங்குளி, ஈரோடு மாவட்டம் - கொத்தமங்கலம், பிரம்மதேசம், எண்ணமங்கலம், இமாம்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம் – கொத்தவாடி, எஸ்.பி.வடுகபாளையம், சேலம் மாவட்டம் - வெள்ளாலகுண்டம், நடுவலூர், காரிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் – தொட்டனூத்து, தருமபுரி மாவட்டம்- மருதிப்பட்டி, பெரியபட்டி, வெள்ளாலபட்டி ஆகிய இடங்களில் 15 கோடியே 93 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம அறிவுசார்மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பழங்குடியினர்களின் பயன்பாட்டிற்காக 9 பல்நோக்கு மையங்கள்
விழுப்புரம் மாவட்டம் - நல்லபாளையம், அம்மன்குளத்துமேடு, தேனேரி, ஒலுண்டியம்பட்டு, கடலூர் மாவட்டம் - ஸ்ரீ இராஜாகணபதிநகர், மேலூர், செங்கல்பட்டு மாவட்டம் - அன்னை சத்யா நகர், கால்பாய், திருவண்ணாமலை மாவட்டம் – கலிங்கலேரி ஆகிய இடங்களில் 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பல்நோக்கு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் பயன்பாட்டிற்காக 26 புதிய வாகனங்கள்
திருச்சிராப்பள்ளி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 62 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள், என மொத்தம் 26 வாகனங்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக 25 புதிய அவசரகால ஊர்திகள் மற்றும் 20 புதிய நடமாடும் மருத்துவ ஊர்திகள்
தொல்குடி நல்வாழ்வுத் திட்டங்களின் மூலம் திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 5 கோடியே 78 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அவசரகால ஊர்திகளை (Ambulance) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நாமக்கல், திண்டுக்கல், சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 4 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள 20 புதிய நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Also Read
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!