Tamilnadu

”GST வரி குறைப்பு - மோடி அரசின் நாடகம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,” இந்தியா மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார ரீதியாக தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்திய பொருட்களுக்கு 50% உரியை உயர்த்தியுள்ளது.

தற்போது, HB1 விசா கட்டணத்தை பல மடங்காக உயர்த்தியுள்ளது.அமெரிக்காவுக்கு இந்தியா அடிமையாக இருப்பதால்தான், எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து எந்த பதிலும் அளிக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு மவுனமாக இருக்கிறது.

GST வரியை குறைத்து விட்டதாக பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். ஆனால் வரியை உயர்த்தியதே இவர்கள்தானே.

GST சீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துவிட்டது. பொதுமக்களுக்கும் எந்த பயனும் கிடைக்கவில்லை. GST வரி குறைப்பு என்ற பெயரில் மோடி அரசு நாடகமாடுகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”நிரந்தரப் பணியாளர்களாக மாறப்போகும் 1,500 பேர்” : அமைச்சர் சேகர்பாபு தகவல்!