Tamilnadu
“அரசு குறித்து பழனிசாமி வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானவை...” - அமைச்சர் மா.சு.!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பாஜக தவெக கட்சிகளை சேர்ந்த சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :
அதிமுக பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எனது முன் தங்களை திமு கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுக பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு குறித்து வைக்கும் ஒவ்வொரு கருத்தும் உண்மைக்கு புறம்பானவை. விலைவாசி குறித்து பேசுவதற்கு காலாண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த அவர், அன்றைய காலகட்டத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தார்? எந்த பொருளுக்கு விலையை குறைத்தார்?. இவையெல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள். தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பேசுகின்ற செய்திகளை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
=> பிளவுபட்ட அரசியல் இயக்கங்களை காப்பாற்றியது ஜெயலலிதா தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு...
ஆதரமற்ற செய்திகளை தொடர்ந்து சொல்வது அவருக்கு வாடிக்கை. ஜெயலலிதா எல்லா அரசியல் இயக்கங்களின் பிளவுக்கு காரணமானவர் என்பதை அனைவரும் அறிவர். அவர் ஏதோ ஒரு கட்சியை பிளவிலிருந்து காப்பாற்றினார் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சிரிப்பாக தான் வருகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !