Tamilnadu
சென்னையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர்... அதிமுக அரசால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம் !
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சி காலத்தில் ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொருக்குப்பேட்டையில் இருந்து திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் வரை செல்லக்கூடிய 32பி வழித்தடம் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுரகப் பாதை பணிகள் துவங்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
அதனைத் தொடர்ந்து ஏழு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரை செல்லக்கூடிய பேருந்துகளை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பேசிய பேருந்து பயணம் செய்யும் பெண்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி என்று கூறினர்.
மேலும், இந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தினமும் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்வோர் உள்ளிட்ட அனைவரும் மிகவும் சிரமம் பட்டதாகவும் தற்போது இது பேருந்து சேவையை மீண்டும் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!