Tamilnadu
ஒரே இடத்தில் ரேஷன் கார்டு சேவைகள்.. சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் - எப்போது?
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.09.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Also Read
-
“வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்” - துணை முதலமைச்சர் பேச்சு!
-
வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள்.. ரூ.1.50 கோடி மானியம்.. அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
காஞ்சிபுரத்தில் 7,297 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
வார இறுதியில் வெளியூர் செல்பவரா ? அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்த முக்கிய தகவல் இதோ !