Tamilnadu
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 3,846 பேருக்கு வீட்டு மனைப்பட்டா உட்பட 4,997 பயனாளிகளுக்கு ரூ.215 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 12.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 25.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கு முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”காலை உணவு திட்டத்தை பஞ்சாப் மாநிலத்திலும் தொடங்க போவதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இங்கு வந்தபோது பெருமையுடன் கூறினார். இப்படி மற்ற முதலமைச்சர்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடும், நம்முடைய அரசும் இருக்கிறது.
1 கோடியே 15 லட்சம் மகளிர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள். விடுபட்ட மகளிருக்கும் வெகு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை நான் உறுதியுடன் சொல்கிறேன்.
எங்களுடைய Brand Ambassador முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் அரசுக்கு Brand Ambassadors-களாக மக்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை உங்களுடைய நண்பர்கள், குடும்ப உறவினர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 2026 தேர்தலில் மீண்டும் கழக ஆட்சிதான் அமையும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!