Tamilnadu
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சென்னையின் நீர் மெட்ரோ திட்டத்திற்கான முதல் கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்போது நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையே நடைபெற்று வருகின்றன.
இதற்கு தேவையான உள்கட்டமைப்புகளுடன், படகு முனையங்கள் மற்றும் பட்டறைகளுக்கு பொருத்தமான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA), நீர்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கூட்டாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த, நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னர் முதல் கட்டமாக நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான 53 கி.மீ நீளமுள்ள பகுதியில் பயணிகள் படகு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை நீர் மெட்ரோ திட்டம் வெற்றி பெற்றால், அது இறுதியில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை இணைக்கும் ஒரு பெரிய 1,078 கி.மீ தேசிய நீர்வழித் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!