Tamilnadu
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், தினை பால் பிஸ்கட், தினை ஜீரா குக்கீ, செரிமான குக்கீகள், ராகி நட்ஸ் குக்கீகள், மல்டிமில்லட் குக்கீகள், சோளம் சாக்லேட் பிஸ்கட், கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ, தினை ஓமம் பிரவுன் குக்கீ, பிரவுன் ஓமம் பிரவுன் குக்கீ, ராகி, சாமாமில் பிரவுன் குக்கீ ஃபட்ஜி பிரவுனி, கருப்பு கவுனி பிரவுனி, டபுள் சாக்லேட் பிரவுனி, கோதுமை வெண்ணிலா பஞ்சு, ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் இலவங்கப்பட்டை கேக், முழு கோதுமை ரொட்டி, ராகி தினை ரொட்டி, மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 8668102600 / 7010143022.
முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!