Tamilnadu
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அனைத்து தொடர்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று துபாயில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் தேவஜித் சைகியாவுக்கு, மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் எழுதிய கடிதத்தில், எல்லை தாண்டிய பதற்றங்கள் இன்னும் நீடிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது தேசிய நலனுக்கு முரணாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேச பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்திற்கும் எதிராக உறுதியாக நிற்கும் இந்திய மக்களின் உணர்வுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரம் தொடர்பான தேசிய கவலைகளின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேசிய நலனுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் வரை பி.சி.சி.ஐ., தனது முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !