Tamilnadu
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் போல பொதுமக்களிடம் பேசினார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டல் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் விரைந்து வரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல், ஓட்டுநரை மிரட்டியுள்ளது பழனிசாமியின் உண்மையான சுயரூபத்தை காட்டியுள்ளது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்இந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுகவினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர், நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்து கூறினார். ஆனால், அங்கு இருந்த அதிமுகவினர் அதை கேட்காமல் அவரை தாக்க முயன்றுள்ளனர். பின்னர் போலீசார் அங்கு வந்து அதிமுகவினரை தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினார். அதிமுகவினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!